வெள்ளி, 11 ஜூலை, 2008

நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?

சென்னை, சுறவம் பதிமூன்றாம் நாள் (ஜன. 26)- நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? என்று தங்கசாலையில் சுறவம் பன்னிரெண்டாம் நாள் (ஜனவரி 25)இல் நடை பெற்ற மொழிப் போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் ஆற்றிய உரை:

தம்பி துரைமுருகன் இங்கே பேசினார் - கருணாநிதி எல்லாவற்றையும் பூம்புகார் முதற்கொண்டு வள்ளுவர் கோட்டம் வரையிலே தமிழை வளர்க்க, தமிழைப் பரப்ப எண்ணுகிறார் என்று சொன்னார். 

அப்படித் தான் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஆளுநர் உரையில் தமிழனுடைய திருநாள் பொங்கல் திருநாள் - தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரு பாமர மனிதன் கூடச் சொல்லுகின்ற அளவிற்குப் பழக்கப்பட்டுவிட்ட அந்த வாசகத்தை நினைவுபடுத்துகின்ற நாள், தை முதல் நாள். அந்தத் தை முதல் நாள்தான் தமிழனுக்கு ஆண்டு முதல்நாள் - இல்லா விட்டால் நான் பிறந்தது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு - உங்களால் சொல்ல முடியுமா? குழம்பி விடுவீர்கள். 

நான் ஆரிய முறைப்படி சொல்லுகின்ற ஆண்டுகளில் ரக்தாட்சி வருஷம் பிறந்தவன். பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதுத, பிரஜோர்பத்தி, ஆங்கீரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விஜய, ஜய, மன்மத, துன்முகி, விளம்பி என்ற இந்த வரிசையில் வட மொழி வரிசைக் கணக்கின்படி - நான் ரக்தாட்சி வருடம் பிறந்தவன். ரக்தாட்சி 58 ஆவது வருடம். ரக்தாட்சிக்குப் பிறகு குரோதன, அட்சய - அத்தோடு அறுபதாண்டுகள் என்ற சுற்று முடிந்துவிடும். அறுபது வருடங்கள் என்றால் என்ன? 

நாரதருக்கு ஒரு ஆசை வந்தது. மகா விஷ்ணுவை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று. யாருக்கு நாரதருக்கு. அவர். ஆசை நிறைவேறியது. இரண்டு பேருக்கும் குழந்தை பிறந்தது. அறுபது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன் றுக்கும் பெயர் வைத்தார்கள். அறுபது வருஷத்தின் பெயர்களை வைத்தார்கள். 62 குழந்தைகள் பிறந்திருந்தால் 62 வருடங்களாக இருந்திருக்கும். அந்த 60 குழந்தைகளின் பெயர்கள்தான் பிரபவ, விபவ என்று நான் சொன்ன வரிசை. இதிலே நான் பிறந்த வருஷன் ரக்தாட்சி. 

பஞ்சாங்க முறைப்படி யாரோ ஒரு வெளியூர்க்காரன் என்னைப் பார்த்து நீங்கள் எப்ப சார் பிறந்தீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன். ரக்தாட்சி ஆண்டுல பிறந்தேன் என்று சொன்னால், அவன் உடனே ரக்தாட்சி ஆண்டிலிருந்து எண்ணிப் பார்த்து விட்டு, ஓகோ, உங்களுக்குப் பன்னிரண்டு வயதுதான் ஆகிறதா என்று 84 வயதுக்காரனைப் பார்த்துக் கேட்பான். ஏனென்றால் அந்தச் சுற்று அப்படித்தான் இருக்கிறது. ரக்தாட்சியிலிருந்து தொடங்கி இப்போதைய வருஷம் வரை எண்ணிப் பார்த்தால் பன்னிரண்டு வயதுதான் வரும். இப்படிப்பட்ட ஒரு கணக்கு - சரியான வயதையோ - சரியான காலத்தையோ குறிப்பிட முடியாது என்ற காரணத்தினால்தான், ஒரு தொடர்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ் பிறந்ததற்குப் பின் - என்று கி.மு., கி.பி. என்று ஆங்கிலேயர்கள் வரிசைக் கணக்கு வைத்திருக்கிறார்களே அதைப் போல ஏன் இருக்கக் கூடாது என்று எண்ணித்தான் 1921 ஆம் ஆண்டு பெரும் புலவர் - மறைமலை அடிகள் என்றால் சாதாரணப் புலவர் அல்ல - இன்றைக்கிருக்கின்ற புலவர்களுக் கெல்லாம் பெரும்புலவர் - அவருடைய தலைமையில் ஒன்றல்ல, இரண்டல்ல, அய்ந்நூறு புலவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலே கூடி, எடுத்த முடிவுதான்- இனிமேல் தமிழருடைய ஆண்டு தை முதல் நாள் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அதுதான் உழவர் திருநாள். உழைப்போருக்கு திருநாள். அந்த நாள் தமிழனுடைய ஆண்டின் முதல் நாளாக வைத்துக் கொள்வோம். இதைத் தொடர் ஆண்டாக வைத்து திருவள்ளுவர் ஆண்டு என்றழைப் போம் என்று அழைத்தார்கள் .பிறகு வந்தவர்களும் அதைக் கிடப்பிலே போட்டு விட்டார்கள். நான் - அண்ணாவின் மறைவுக்குப் பின் -முதலமைச்சராக வந்த பிறகு அதை ஓரளவு ஏடுகளிலே நம்முடைய பத்திரப் பிரமாணங்களிலே அதைப் பதிவு செய்தேன். அப்படியே தொடர்ந்தது. 

இந்த ஆண்டு எல்லோரையும் கலந்து கொண்டு, புலவர்களையும் கலந்து கொண்டு அறிவித்திருக்கி றோம். தமிழக அரசின் சார்பாக இனி தை முதல் நாள்தான் தமிழனுடைய முதல் ஆண்டு பிறப்பு நாள் என்று அறிவித்திருக்கிறோம்.

இதற்கு உடனே - யாராவது ஆரியர்கள் எதிர்த்து இருந்தால் நான் ஆச்சரியப்பட்டி ருக்க மாட்டேன். அய்யர்கள் எதிர்த்திருந்தால் நான் ஆச்சரியப்பட்டு இருக்கமாட்டேன். தம்பி துரை முருகன் சொன்னது மாதிரி இதை இரண்டு மூன்று புலவர்கள், இதை ஒத்துக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதில் ஆச்சரியம் ஒன்று மில்லை. சங்க காலத்தில் தமிழ்ச் சங்கத்திலேயே புலவர் நக்கீரன் முன் குயக் கொண்டான் என்ற தமிழ்ப் புலவன் ஆரியம் நன்று; தமிழ் தீது என்று சொன்னானாம். அதைக் கேட்டு கோபம் கொண்ட நக்கீரன், தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ சாகக்கடவாய் என்று அறம் பாடிக் கொன்றாராம். பின்னர் அறிஞர் பெருமக்கள் அனைவரும் வேண்டிக் கொண்டபடி நக்கீரன் மறுபடியும் வெண்பாபாடி குயக் கொண்டானை உயிர் பெறச் செய்தாராம்.
இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்

.

 

வரிசை

ஆரிய ஆண்டு

ஆங்கில ஆண்டு

வரிசை

ஆரிய ஆண்டு

ஆங்கில ஆண்டு

1

பிரபவ

1987--1988 

31

ஹேவிளம்பி

2017--2018 

2

விபவ

1988--1989 

32

விளம்பி

2018--2019 

3

சுக்ல

1989--1990 

33

விகாரி

2019--2020 

4

பிரமோதூத

1990--1991 

34

சார்வரி

2020--2021 

5

பிரசோர்பத்தி

1991--1992 

35

பிலவ

2021--2022 

6

ஆங்கீரச

1992--1993 

36

சுபகிருது

2022--2023 

7

ஸ்ரீமுக

1993--1994 

37

சோபகிருது

2023--2024 

8

பவ

1994--1995 

38

குரோதி

2024--2025 

9

யுவ

1995--1996 

39

விசுவாசுவ

2025--2026 

10

தாது

1996--1997

40

பிராபவ

2026--2027 

11

ஈஸ்வர

1997--1998 

41

பிலவங்க

2027--2028 

12

வெகுதானிய

1998--1999 

42

கீலக

2028--2029 

13

பிரமாதி

1999--2000 

43

செளமிய

2029--2030 

14

விக்கிரம

2000--2001 

44

சாதாரண

2030--2031 

15

விஷ¤

2001--2002 

45

விரோதிகிருது

2031--2032 

16

சித்திரபானு

2002--2003 

46

பரிதாபி

2032--2033 

17

சுபானு

2003--2004 

47

பிரமதீச

2033--2034 

18

தாரண

2004--2005 

48

ஆனந்த

2034--2035 

19

பார்த்திப

2005--2006 

49

ராட்சச

2035--2036 

20

விய

2006--2007 

50

நள

2036--2037 

21

சர்வசித்து

2007--2008 

51

பிங்கள

2037--2038 

22

சர்வதாரி

2008--2009 

52

காளயுக்தி

2038--2039 

23

விரோதி

2009--2010 

53

சித்தார்த்தி

2039--2040 

24

விருத்தி

2010--2011 

54

ரெளத்திரி

2040--2041 

25

கர

2011--2012 

55

துன்மதி

2041--2042 

26

நந்தன

2012--2013 

56

துந்துபி

2042--2043 

27

விஜய

2013--2014 

57

ருத்ரோத்காரி

2043--2044 

28

ஜய

2014--2015 

58

ரக்தாட்சி

2044--2045 

29

மன்மத

2015--2016 

59

குரோதன

2045—2046 

30

துன்முகி

2016--2017 

60

அட்சய

2046—2047

61

பிரபவ

20

இப்படி தொடர்ந்து கொண்டே இருக்குமாம்.........!?

 

 

சிந்திக்க!!!!   தமிழர்கள் மீதும், தமிழ் பண்பாட்டின் மீதும் உள்ள பண்பாட்டு படையெடுப்பின் எச்சங்களை துடைத்தெரிய வேண்டிய கடமையை தமிழர்கள் உணர்ந்திருப்பார்களேயானால் திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவின் அழைப்பிதழில் சர்வதாரி ஆண்டு(இது தமிழா?!) என்று குறிப்பிட்டு இருப்பார்களா? தமிழக முதல்வர் கலைஞர் அறிவித்த திருவள்ளுவராண்டை, திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கூட ஏன் முன்னிருத்தவில்லை?என்ற கேள்வியை கேட்க இருக்கின்ற கடமை உணர்ந்த காரணத்தினால் இத்துண்டு வெளியீடு உங்கள் கைகளில் உள்ளது. வழக்கத்தில் இல்லை என்று அமைப்பாளர்கள் நழுவப் பார்க்கலாம். தங்கள் கைகளில் தவழும் தாள் கூட சில-பல நூற்றாண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இல்லாத்துதான். வழக்கத்தில் இல்லாதது பிரச்சினையா? அல்லது வழக்கத்தில் கொண்டு வர உள்ளமில்லாமைதான் பிரச்சினையா?

 

 

நன்றி: http://www.tamilnadutalk.com/portal/lofiversion/index.php/t10863.html

      http://www.muthukamalam.com/

வெள்ளி, 4 ஜூலை, 2008

ஒரு மத(ல)ம் போக்க இன்னொரு மத(ல)ம் தீர்வாகுமா?

              வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று நாம் பெருமை பேசிக்கொள்வதுண்டு. விருந்தோம்பல் பண்பே தமிழனின் தலையாய பண்பு என்று சில நேரம் சிலிர்த்து கொள்வதுமுண்டு. ஆனால், வந்தவனையெல்லாம் வாழவிட்டுவிட்டு இழித்தவாய்த் தனமாக கீழே விழுந்து கிடக்கும் தமிழனின் இழிநிலை பற்றி பேச ஏனோ தயக்கம் நிலவுகிறது இச்சமூகத்தில். தமிழ்நாட்டை பொருத்தவரை ரவுடி தலைவன், பொறுக்கி தலைவன், சாதி-மத வெறியன் தலைவன், பெண்ணுடன் திரையில் சல்லாபம் புரிபவன் தலைவன். ஆனால், சாதி வெறியை பற்றி கேள்வி கேட்பவனை,எதிர்த்து நிற்பவனை சாதித்தலைவன் என்றோ, கடவுளை கொண்டு பிழைப்பு நட்த்துப்பவனை கேள்வி கேட்பவனை நாத்திகன் என்றோ, மத விரோதி என்றோ ஒதுக்கி வைத்து தன் பிழைப்புக்கு பாதிப்பு வராமல் பழையச் சதிக்கூட்ட்த்தின் சதி இன்றுவரை நீளுகிறது, பழைய சதி இன்றும் தொடர்கிறது.

 

                 அமைதிப்படை திரைப்படத்தில் மணிவண்ணன், சத்யராஜ் பேசுவதாக ஒரு உரையாடல் வரும் மணிவண்ணன் கூறுவார் சீட்டு பணம் குடுத்து வாங்கிடுவே! வோட்டு ஜன்ங்கள்ள போடணும். சத்யராஜ் சொல்லுவார், நாமதான் ஒண்ணுமே பண்ணலையப்பா. மணிவண்ணன் இப்படியாக பதிலளிப்பார், ஆமா! ஏதாவது செஞ்சாதானே மக்கள் ஓட்டு போடுவாங்க.

 

            இதேபோல மக்களை பற்றி சிந்திக்காத, மக்களுக்கு ஏதும் செய்யாதவனெல்லாம் தலைவன். இதை பற்றி கேள்வி கேட்பவனெல்லாம் தீவிரவாதி. எடுத்துகாட்டுக்கு விஜயகாந்தை எடுத்துக் கொள்வோம், இவர் நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டவர், பம்பரம் விட்டவரிடம் சமூக அக்கறை எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லையா? இது போன்ற உளவியல் கொள்ளையில் ஈடுபடுபவர் எப்படி நாட்டில் நடக்கும் கொள்ளைகளை தீர்ப்பார். இது போதாதென்று நடிகையின் தொப்புளில் தேங்கியிருக்கும் நீரை உறிஞ்சி குடித்தவர் இன்னொரு கட்சி ஆரம்பித்து சமத்துவம் பேசுகிறார்.எப்படி அம்பேத்கரையும், முத்துராமலிங்கம் படங்களை விளம்பரங்களில் போட்டு(?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?).

 

             இதில் இன்னொரு கழிசடையும் நடிகரும் சேர்ந்திருக்கிறார்(ன்) முத்துராமலிங்கம் சமத்துவம் விரும்பினாராம், அவர் எல்லா மதங்களும் சாதியையும் மதித்தாராம்.(பின் ஏன் முத்துராமலிங்கத்தை பின்பற்றுபவர்கள் சாதியக்கொடுமை ஏனோ புரிகிறார்கள்? முத்துராமலிங்கம் சொன்னது காதில் விழ வில்லையோ?) தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்றாராம். அவரின் பட்த்தைஒ கொடியில் பதிப்பது தங்களுக்கு தாங்களே மதிப்பு செய்வதாகுமாம். இதில் எந்த கண்ணை கொண்டு முதுகுளத்தூரில் நடந்த கொடுமையை பார்த்து கொண்டிருந்தார் அல்ல்து எந்த கண்ணை கொண்டு கண்ணசைத்து தூபம் போட்டுக்  கொண்டிருந்தார்.எறையூரில், உத்தபுரத்தில் தீண்டாமை இந்த நடிகருடைய கண் எங்கிருந்த்தாம்?

 

(இந்த நடிகர் பற்றி ஆனந்த விகடன் பத்திரிக்கை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது, இவர் சொன்னாராம்,

கண்ணால் கண்டால் கடவுள் என்றால் குருடனுக்கு கடவுள் எப்படி புலப்படுவார்? நான் கேட்கிறேன் குருடனைவிடு, கண் தெரியும் நீ, எப்புலனை கொண்டு கடவுள் உணர்ந்தாய்? குருடனை பற்றி கவலைப்படுபவரே, உன் தத்துவப்படி குருடனை படைத்த்து யார்?)

 

           இப்படி வெந்தது, வேகாதது, அரைவேக்காடு என எல்லாவனையும் ஆழ விட்டதின் விழைவு நம் மண்ணில் நாம் இன்று அடிமை!

 

பார்ப்பான் வந்தான் நம்மை சூத்திரன் என்று சொன்னான், நீ எனக்கு தொண்டு செய்யவே படைக்கப்பட்டேன்னான். அதற்கு எதிர்ப்பு சில அறிவாளிகளிடமிருந்து கிளம்பியது, கேள்வி கேட்க துவங்கினர், கேள்வி கேட்க கற்று கொடுத்தனர். கேள்விகள் தொடர்நத்தும்  உடனேயே கிருஷ்ணன் சொல்றான்னு கிதையை காண்பித்து கடவுளே சொல்லிட்டாரு நீ சூத்திரன்னு அதனாலே நீ எனக்கு தொண்டு செய்தே சாவது உன் பிறப்பு கடமைன்னு அரசன் மூலமாக நடைமுறை படுத்தினான். எதிர்த்தவனை கழுவேற்றினான். ராமன் சூத்திர சம்பூகனை கொன்ன கதை, நந்தனை தீயிலுட்டு கொழுத்தியதை கதை என நம் சூத்திரத்தனமையை நியாயப்படுத்தி பல கதைகள் சொல்லி வழிபாட்டு உரிமையை பறிச்சான். நாம் கீழ்ச்சாதியாக பிறந்தது நம் குற்றம் என நம்ப வைத்தான். முற்பிறவியின் என்று எண்ண வைத்தான்.

                     பார்ப்பான் வந்து அறிவை தின்றான், நம் உழைப்பை தின்றான், நாம் நம் இனத்தவர்களை பட்டினி போட்டு, உழைத்து அவனுக்கு கொடுத்து நம் விருந்தோம்பல் பண்பை மெச்சி கொண்டே இருந்து விட்டோம். கற்சிலை(கடவுள்) என்ற தபால் பெட்டி வாயிலாக பார்ப்பானுக்கு உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் அழித்து நம் தோழர்களை சேரியில் தள்ளிவிட்டோம். பார்ப்பான் செய்தது சூழ்ச்சி என்றால் நம் இனத்தவர்கள் செய்தது துரோகம். பார்ப்பான் நம்மவர்களில் சிலரை நீ இத்தனை பேருக்கு மேல் சாதி என்று சாத்திர சூத்திரம் காண்பிக்க, நம்மவர்களும் எலும்புத்துண்டுக்கு அலையும் நாய் போல சாதிப் பெருமை பேசி, நம் உறவுகளை சாதிவெறி பிடித்து தன் கோர பற்களால் கடித்து குதறி வருகின்றனர் இன்று வரையில்.............!

                    

              பார்ப்பனீயத்தின் கொடுமை தாங்காமல் சிலர் தங்களை இடமாற்றம்(மன மாற்றமல்ல) செய்து கொண்டனர். கிருஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக மாறினர். ஆனால், இன்றைய நிலை என்ன? கிருஸ்துவர்கள் இயேசுவு பிறந்த கொட்டகையின் பக்கத்துக்கு கொட்டகையிலிருந்து பார்த்தவர்கள் போல பீற்றி கொள்(ல்)கின்றனர். இஸ்லாமியர்கள் ஏதோ பாபரின் பேரன் போல பெருமை கொள்(ல்)கின்றனர். மதமாற்றத்தை விட மனமாற்றம் பெரிய சமூக மாற்றத்தை தரும் என்பதை உணர மறுக்கின்றனர்.

 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவர் இயேசு இம்மக்களின் பாவங்களை கழுவ அனுப்பி வைத்தார் என்று நம்பும் கிருஸ்துவர்கள், தமிழர்கள் சாதிச் சாக்கடையில் மூச்சு திணறி கொண்டிருந்த பொழுது இஸ்ரவேலில் என்ன செய்து கொண்டிருந்தார். சிலுவைக்காக காத்துக்கொண்டிருந்தாரா என்ன? தமிழர்களை சாதியக் கொடுமையால் தினம்-தினம் சிலுவையில் அடித்த்து போன்ற கொடுமைகள் நடந்த்தே(நடக்கின்றதே). பாவங்கள் போக்க வந்தவருக்கு எங்கள் வலி தெரியவில்லையோ?

 

அல்லா நபிகளை அனுப்பி வைத்தார், அவர்தான் கடைசித்தூதர், இதற்கு முன் வந்த ஈசா நபியும் கடவுளின் தூதர் என்று நம்பும் இஸ்லாமியர்களே! 400 ஆண்டுகள் இடைவெளியில் இரண்டு தூதர்களை அரபு பிரதேசத்தை நோக்கி அனுப்பிய உங்கள் அல்லா, சாதியச் சாக்கடையிலிருந்து எழ எமக்கு ஒரு தூதரை ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி எழுமா? இல்லையா?

 

                     நாங்கள் பெருந்திரளாக அடிபட்டு, உதைப்பட்டு, சொரணைக்கெட்டு கிடந்த காலத்தில் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வராவிட்டால் எங்கள் நிலை என்ன? இன்று கிருஸ்துவர்கள் பயன்படுத்தும் பைபிளை பாருங்கள், ஒரே சமஸ்கிருத வாடை, கிருஸ்துவர்கள் மத்தியில் சாதிப்பற்று(இதற்கு எறையூர் போன்ற கிராமங்கள் எடுத்துக்காட்டு), இந்நிலையில் கிருஸ்துவத்தை, இன்னொரு இந்து முகம் என்றுதானே சொல்லத்தூண்டும். கிருஸ்துவர்கள் எத்தனைபேர் தம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுகின்றனர். அதென்ன? ஆல்பர்ட் நாடார், அந்தோணி பறையர். பார்ப்பன மதம் எங்கள் மொழியையும், பண்பாட்டையும் எப்படி சீரழித்த்தோ அதே போலத்தானே நீங்களும் வரிந்து கட்டி கொண்டு செய்கிறீர்கள். உங்கள் கோயிலில் வெகுவாக பயன்படுத்தப்படும் ஞானஸ்நானம், ஸ்தோத்தரம், பிரத்ர், இவையெல்லாம் தமிழா? நாங்கள் உங்கள் கிருஸ்துவ மத்த்தையும் இன்னொரு பண்பாட்டு படையெடுப்பாகத் தானே கருத முடியும். இவற்றில் பல இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும், இவர்கள் மத மறுப்பு திருமணம் என்றால் குதிக்காமல் இருப்பார்களா? தமிழ் பெயர்களை சூட்டுவார்களா?  இவை நீடித்தால் கிருஸ்துவன் இருப்பான், இஸ்லாமியன் இருப்பான், இந்து இருப்பான், தமிழன் மட்டும் இருக்க மாட்டான்.

 

தோழர்களே! விழிப்படையுங்கள் நமக்கு எதற்கு மதம்? மதம் நம்மை சீரழித்த்து போதாதா? ஒரு மத(ல)ம் போக்க இன்னொரு மத(ல)ம் தீர்வாகுமா?

புதன், 7 மே, 2008

திருமா மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு

மும்பையில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நானும் என் தோழர்களை அழைத்துக்கொண்டு உரை எழுச்சியோடு இருக்கும் என்று எதிர்நோக்கி காத்திருந்தோம். எழுச்சியோடு என்றால் என்ன?
1) தன்னிலை மறந்த தாழ்த்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் பற்றி
2) மற்றவர்களைவிட தாழ்த்தப்பட்டவர்கள் அதிகளவில் சாதி ஒழிப்பில் ஈடுபட வேண்டியதன் கட்டாயம்.
3) எம்மதம் நம்மை தாழ்த்தி, நம் அடையாளங்களை அழித்து நம் தனித்துவத்தை ஒழித்த்தோ, அம்மத சூழ்ச்சியிலிருந்து வெளிவர வேண்டிய கட்டாயம். இந்துத்தவத்திலிருந்து விடுபட்டு வரவேண்டிய நிர்பந்தம்
4)பகுத்தறிவின் தேவை.
5) நமக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்களாகிய அம்பேத்கர் போற்றிய பெரியார், பெரியார் மதித்த அம்பேத்கர் பற்றிய குறிப்புகள்.
6) சாமியார்களிடம் ஏமாந்து திரிவதால், நம் அகச்சூழல் மற்றும் நம் புறச்சூழல் பாதிக்கபடுவது குறித்து.
7) பகுத்தறிவின் தேவை.
8) போராட வேண்டிய சூழல்.
9) வாழ்க்கை முறை மேம்பட அரசியல் அதிகாரம்.
10) தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே நாம் காட்டும் பாகுபாட்டை ஒழிப்பது

முதலான கருத்துக்களை முழங்குவார் என்று எதிர்பார்த்தோம். அதை திருமாவிடம் தெரிவிப்பதற்காக நாங்கள் பிரதி எடுத்துக் கொண்டு வந்திருந்த துண்டுபிரசுரமும், அத்தோடு சேர்த்து நாங்களும் ஒரு காகித்த்தில் மேற்சொன்ன கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டு மேடையில் அமர்ந்திருந்த ஒரு தோழரிடம் கொடுத்தோம். அதை அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழரிடம் கொடுத்தார். அந்த தோழரோ அதை படித்து பார்த்துவிட்டு படித்து பார்த்துவிட்டு தன் சட்டைபையில் வைத்து கொண்டார். (பிறகு நானே நேரடியாக சென்று அந்த தாள்களின் இன்னொரு பிரதியை திருமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன்,என்பது இன்னொரு செய்தி)
இது எப்படிபட்ட சூழல்! தோழர் திருமா சிந்தித்து பார்க்க வேண்டும். தங்களோடு களம் நின்று சாதி ஒழிக்க ஆயத்தாமாய் இருக்கும் என் போன்ற தோழர்களின் கருத்துக்கள் கூட திருமா வரை போக்க்கூட அனுமதிக்கமுடியாத இந்த மாதிரியான கொள்கை அரவேக்காட்டுகளை வைத்துக்கொண்டு நாம் எதை அடையப் போகிறோம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். ஆனால், இதே போன்று பலர் எல்லா இயக்கத்திலும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும். சாதி ஒழிப்பு, சமத்துவம் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இவர்கள் களைகள்,. இவர்கள் கண்டிப்பாக களையப்பட வேண்டியர்கள், அல்லது திருத்தபட வேண்டியர்கள்.
தோழர் திருமா பேசும் போது குறிப்பிட்டார், “எந்த சமூகம் தங்கள் தலைமை யாரென சரியாக தேர்ந்தெடுக்கவில்லையோ அது உருப்படவே செய்யாது” என்று. உண்மை. ஆனால், ஒரு நல்ல தலைமையின் கீழ் கொள்கை-பிடிப்பு, கொள்கை தெளிவில்லாதவர்கள் இருப்பார்களேயானால், அந்த தலைமையின் மேலான நோக்கமே சிதைக்கப்படக்கூடிய அதிகப்படியான வாய்ப்புண்டு என்பதை தோழர் திருமா மறந்து விடக்கூடாது.
நம் மக்கள் அரசியல் படுத்தபட வேண்டும், அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று திருமா கூறினார். கண்டிப்பாக நடக்க வேண்டும். ஆனால், மக்களை அதிகாரத்திற்கு கொண்டுவரும் முன் அவர்களை களப்போராளிகள் கொண்டு பிரச்சாரத்தின் மூலம் கொள்கையில் செம்மை படுத்த வேண்டும். தெரிந்த எதிரிகளை விட நமக்கு தெரியாத துரோகிகள் பலர் உண்டு,என்பதை மறந்து விடக்கூடாது. எத்தனை தாழ்த்தபட்டவன் ஆர்.எஸ்.எஸுக்கு ஆதரவாக செயல்படுகிறான். கொள்கை தெளிவு பெற்று எழாத வரை, திரளாத வரை உரிமை பெற்றாலும், நம் தோழர்கள் தொலைத்து விடுவார்களேயன்றி வேறென்ன செய்வார்கள். அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும், சரிதான். இந்துத்வம் தலைக்கு ஏறியவர்களையும் கட்சியில் சேர்ப்பது, நம் முன்னேற்றதுக்கு நாமே போட்ட தடையாக போய் முடிய வாய்ப்புள்ளதல்லவா?
இந்துத்வத்திற்கு அடிபணிபவன் விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் அடிப்படை உறுப்பினராக கூட வாய்ப்பு கிடையாது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சார்ந்தவன் மதபண்டிகளில் கலந்து வாழ்த்து தெரிவிக்க கூடாது. மாறாக நம் இனத்திற்கு தேவையான கருத்துக்களை எங்கும் தெரிவிக்க தயங்க்க்கூடாது. அதற்காக மற்ற மதங்களில் சேரலாம் என்பது பொருளல்ல.மற்ற மதங்கள் இந்து மத்த்தின் அளவு கொடுமை படுத்தவில்லை அவ்வளவுதான்
“அறிவாளி அடுத்தவன் தவற்றிலிருந்து தன்னை திருத்தி கொள்வான்
முட்டாள் தன் தவற்றிலிருந்து திருந்துவான்.”

இந்துத்தவம் நம் பல்லாயிரம் ஆண்டுகளாக கொடுமை படுத்தியிருக்கிறது ஆதலால் நம் முதல் எதிரி இந்துத்தவத்தை கடைபிடிப்பவன். மற்ற மதங்களை பார்ப்போமானால் உலக வரலாற்றில் இரத்தம் அதிகம் சிந்தியதற்கு காரணமே மதங்கள்தான்(அது யூத மதமாகட்டும், அல்லது அதனின்று தோன்றிய கிருஸ்துவ இஸ்லாமிய மதமாகட்டும், இஸ்லாமிய மதங்களாகட்டும், அல்லது புத்தமதமாகட்டும்). ஆனால் நம் தோழர்களை விநாயகர் சதுர்த்தியை ஆண்டுக்கணக்காக கொண்டாடுகிறார்கள். தோழர் திருமா இது நம் தோழர்களை திசை திருப்ப இந்து மத அமைப்புகள் செய்யும் சூழ்ச்சி என்பதை அறிந்து இதை எப்படியாவது தடுத்து நிறுத்த திட்டங்கள் தீட்ட வேண்டும்
நாம் நம்மை செம்மை படுத்திக்கொண்டு மனிதனாக மாற வேண்டும் என்றால் மதங்கள் விட்டொழிக்க வேண்டும் என்று தோழர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டனா? அவன் அம்பேதகர் ஆளுப்பா! பெரியார் பேரன்யா! என்ற நிலை வருமளவு நம் தோழர்கள் கற்க வேண்டும். சிந்திக்க வேண்டும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் மட்டுமல்ல அனைத்து தமிழ் அமைப்புகளும் பாடுபட வேண்டும்.

குறிப்பு: திருமாவுக்கு சிந்திக்க கற்று தர வேண்டியதில்லை, ஆனால் இந்த அரசியிலில் உள்ள உளவியல் ரீதியிலான பிரச்சினைகளில், சில விடுபட்டு போக வாய்ப்புண்டு. நம் தோழர்கள், கொள்கை தெளிவில்லாமல் சிறுத்தைகள் என்று அழைத்த உடனேயே விசிலடித்து ஆர்ப்பரிக்கும் விசில் குஞ்சுகளாக மாறிவிடக்கூடாது. தோழர்களை கொள்கை தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு கொள்கை உடன்பாடு உள்ளவர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும். கொள்கை தெளிவுள்ளவர்க்ளுக்கு பதவி ஒரு பொருட்டாக இருக்காது என்றே கருதுகிறேன்.