சென்னை, சுறவம் பதிமூன்றாம் நாள் (ஜன. 26)- நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? என்று தங்கசாலையில் சுறவம் பன்னிரெண்டாம் நாள் (ஜனவரி 25)இல் நடை பெற்ற மொழிப் போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் ஆற்றிய உரை:
தம்பி துரைமுருகன் இங்கே பேசினார் - கருணாநிதி எல்லாவற்றையும் பூம்புகார் முதற்கொண்டு வள்ளுவர் கோட்டம் வரையிலே தமிழை வளர்க்க, தமிழைப் பரப்ப எண்ணுகிறார் என்று சொன்னார்.
அப்படித் தான் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஆளுநர் உரையில் தமிழனுடைய திருநாள் பொங்கல் திருநாள் - தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரு பாமர மனிதன் கூடச் சொல்லுகின்ற அளவிற்குப் பழக்கப்பட்டுவிட்ட அந்த வாசகத்தை நினைவுபடுத்துகின்ற நாள், தை முதல் நாள். அந்தத் தை முதல் நாள்தான் தமிழனுக்கு ஆண்டு முதல்நாள் - இல்லா விட்டால் நான் பிறந்தது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு - உங்களால் சொல்ல முடியுமா? குழம்பி விடுவீர்கள்.
நான் ஆரிய முறைப்படி சொல்லுகின்ற ஆண்டுகளில் ரக்தாட்சி வருஷம் பிறந்தவன். பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதுத, பிரஜோர்பத்தி, ஆங்கீரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விஜய, ஜய, மன்மத, துன்முகி, விளம்பி என்ற இந்த வரிசையில் வட மொழி வரிசைக் கணக்கின்படி - நான் ரக்தாட்சி வருடம் பிறந்தவன். ரக்தாட்சி 58 ஆவது வருடம். ரக்தாட்சிக்குப் பிறகு குரோதன, அட்சய - அத்தோடு அறுபதாண்டுகள் என்ற சுற்று முடிந்துவிடும். அறுபது வருடங்கள் என்றால் என்ன?
நாரதருக்கு ஒரு ஆசை வந்தது. மகா விஷ்ணுவை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று. யாருக்கு நாரதருக்கு. அவர். ஆசை நிறைவேறியது. இரண்டு பேருக்கும் குழந்தை பிறந்தது. அறுபது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன் றுக்கும் பெயர் வைத்தார்கள். அறுபது வருஷத்தின் பெயர்களை வைத்தார்கள். 62 குழந்தைகள் பிறந்திருந்தால் 62 வருடங்களாக இருந்திருக்கும். அந்த 60 குழந்தைகளின் பெயர்கள்தான் பிரபவ, விபவ என்று நான் சொன்ன வரிசை. இதிலே நான் பிறந்த வருஷன் ரக்தாட்சி.
பஞ்சாங்க முறைப்படி யாரோ ஒரு வெளியூர்க்காரன் என்னைப் பார்த்து நீங்கள் எப்ப சார் பிறந்தீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன். ரக்தாட்சி ஆண்டுல பிறந்தேன் என்று சொன்னால், அவன் உடனே ரக்தாட்சி ஆண்டிலிருந்து எண்ணிப் பார்த்து விட்டு, ஓகோ, உங்களுக்குப் பன்னிரண்டு வயதுதான் ஆகிறதா என்று 84 வயதுக்காரனைப் பார்த்துக் கேட்பான். ஏனென்றால் அந்தச் சுற்று அப்படித்தான் இருக்கிறது. ரக்தாட்சியிலிருந்து தொடங்கி இப்போதைய வருஷம் வரை எண்ணிப் பார்த்தால் பன்னிரண்டு வயதுதான் வரும். இப்படிப்பட்ட ஒரு கணக்கு - சரியான வயதையோ - சரியான காலத்தையோ குறிப்பிட முடியாது என்ற காரணத்தினால்தான், ஒரு தொடர்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ் பிறந்ததற்குப் பின் - என்று கி.மு., கி.பி. என்று ஆங்கிலேயர்கள் வரிசைக் கணக்கு வைத்திருக்கிறார்களே அதைப் போல ஏன் இருக்கக் கூடாது என்று எண்ணித்தான் 1921 ஆம் ஆண்டு பெரும் புலவர் - மறைமலை அடிகள் என்றால் சாதாரணப் புலவர் அல்ல - இன்றைக்கிருக்கின்ற புலவர்களுக் கெல்லாம் பெரும்புலவர் - அவருடைய தலைமையில் ஒன்றல்ல, இரண்டல்ல, அய்ந்நூறு புலவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலே கூடி, எடுத்த முடிவுதான்- இனிமேல் தமிழருடைய ஆண்டு தை முதல் நாள் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அதுதான் உழவர் திருநாள். உழைப்போருக்கு திருநாள். அந்த நாள் தமிழனுடைய ஆண்டின் முதல் நாளாக வைத்துக் கொள்வோம். இதைத் தொடர் ஆண்டாக வைத்து திருவள்ளுவர் ஆண்டு என்றழைப் போம் என்று அழைத்தார்கள் .பிறகு வந்தவர்களும் அதைக் கிடப்பிலே போட்டு விட்டார்கள். நான் - அண்ணாவின் மறைவுக்குப் பின் -முதலமைச்சராக வந்த பிறகு அதை ஓரளவு ஏடுகளிலே நம்முடைய பத்திரப் பிரமாணங்களிலே அதைப் பதிவு செய்தேன். அப்படியே தொடர்ந்தது.
இந்த ஆண்டு எல்லோரையும் கலந்து கொண்டு, புலவர்களையும் கலந்து கொண்டு அறிவித்திருக்கி றோம். தமிழக அரசின் சார்பாக இனி தை முதல் நாள்தான் தமிழனுடைய முதல் ஆண்டு பிறப்பு நாள் என்று அறிவித்திருக்கிறோம்.
இதற்கு உடனே - யாராவது ஆரியர்கள் எதிர்த்து இருந்தால் நான் ஆச்சரியப்பட்டி ருக்க மாட்டேன். அய்யர்கள் எதிர்த்திருந்தால் நான் ஆச்சரியப்பட்டு இருக்கமாட்டேன். தம்பி துரை முருகன் சொன்னது மாதிரி இதை இரண்டு மூன்று புலவர்கள், இதை ஒத்துக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதில் ஆச்சரியம் ஒன்று மில்லை. சங்க காலத்தில் தமிழ்ச் சங்கத்திலேயே புலவர் நக்கீரன் முன் குயக் கொண்டான் என்ற தமிழ்ப் புலவன் ஆரியம் நன்று; தமிழ் தீது என்று சொன்னானாம். அதைக் கேட்டு கோபம் கொண்ட நக்கீரன், தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ சாகக்கடவாய் என்று அறம் பாடிக் கொன்றாராம். பின்னர் அறிஞர் பெருமக்கள் அனைவரும் வேண்டிக் கொண்டபடி நக்கீரன் மறுபடியும் வெண்பாபாடி குயக் கொண்டானை உயிர் பெறச் செய்தாராம்.
இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்
.
வரிசை | ஆரிய ஆண்டு | ஆங்கில ஆண்டு | வரிசை | ஆரிய ஆண்டு | ஆங்கில ஆண்டு |
1 | பிரபவ | 1987--1988 | 31 | ஹேவிளம்பி | 2017--2018 |
2 | விபவ | 1988--1989 | 32 | விளம்பி | 2018--2019 |
3 | சுக்ல | 1989--1990 | 33 | விகாரி | 2019--2020 |
4 | பிரமோதூத | 1990--1991 | 34 | சார்வரி | 2020--2021 |
5 | பிரசோர்பத்தி | 1991--1992 | 35 | பிலவ | 2021--2022 |
6 | ஆங்கீரச | 1992--1993 | 36 | சுபகிருது | 2022--2023 |
7 | ஸ்ரீமுக | 1993--1994 | 37 | சோபகிருது | 2023--2024 |
8 | பவ | 1994--1995 | 38 | குரோதி | 2024--2025 |
9 | யுவ | 1995--1996 | 39 | விசுவாசுவ | 2025--2026 |
10 | தாது | 1996--1997 | 40 | பிராபவ | 2026--2027 |
11 | ஈஸ்வர | 1997--1998 | 41 | பிலவங்க | 2027--2028 |
12 | வெகுதானிய | 1998--1999 | 42 | கீலக | 2028--2029 |
13 | பிரமாதி | 1999--2000 | 43 | செளமிய | 2029--2030 |
14 | விக்கிரம | 2000--2001 | 44 | சாதாரண | 2030--2031 |
15 | விஷ¤ | 2001--2002 | 45 | விரோதிகிருது | 2031--2032 |
16 | சித்திரபானு | 2002--2003 | 46 | பரிதாபி | 2032--2033 |
17 | சுபானு | 2003--2004 | 47 | பிரமதீச | 2033--2034 |
18 | தாரண | 2004--2005 | 48 | ஆனந்த | 2034--2035 |
19 | பார்த்திப | 2005--2006 | 49 | ராட்சச | 2035--2036 |
20 | விய | 2006--2007 | 50 | நள | 2036--2037 |
21 | சர்வசித்து | 2007--2008 | 51 | பிங்கள | 2037--2038 |
22 | சர்வதாரி | 2008--2009 | 52 | காளயுக்தி | 2038--2039 |
23 | விரோதி | 2009--2010 | 53 | சித்தார்த்தி | 2039--2040 |
24 | விருத்தி | 2010--2011 | 54 | ரெளத்திரி | 2040--2041 |
25 | கர | 2011--2012 | 55 | துன்மதி | 2041--2042 |
26 | நந்தன | 2012--2013 | 56 | துந்துபி | 2042--2043 |
27 | விஜய | 2013--2014 | 57 | ருத்ரோத்காரி | 2043--2044 |
28 | ஜய | 2014--2015 | 58 | ரக்தாட்சி | 2044--2045 |
29 | மன்மத | 2015--2016 | 59 | குரோதன | 2045—2046 |
30 | துன்முகி | 2016--2017 | 60 | அட்சய | 2046—2047 |
61 | பிரபவ | 20 | இப்படி தொடர்ந்து கொண்டே இருக்குமாம்.........!? |
சிந்திக்க!!!! தமிழர்கள் மீதும், தமிழ் பண்பாட்டின் மீதும் உள்ள பண்பாட்டு படையெடுப்பின் எச்சங்களை துடைத்தெரிய வேண்டிய கடமையை தமிழர்கள் உணர்ந்திருப்பார்களேயானால் திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவின் அழைப்பிதழில் சர்வதாரி ஆண்டு(இது தமிழா?!) என்று குறிப்பிட்டு இருப்பார்களா? தமிழக முதல்வர் கலைஞர் அறிவித்த திருவள்ளுவராண்டை, திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கூட ஏன் முன்னிருத்தவில்லை?என்ற கேள்வியை கேட்க இருக்கின்ற கடமை உணர்ந்த காரணத்தினால் இத்துண்டு வெளியீடு உங்கள் கைகளில் உள்ளது. வழக்கத்தில் இல்லை என்று அமைப்பாளர்கள் நழுவப் பார்க்கலாம். தங்கள் கைகளில் தவழும் தாள் கூட சில-பல நூற்றாண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இல்லாத்துதான். வழக்கத்தில் இல்லாதது பிரச்சினையா? அல்லது வழக்கத்தில் கொண்டு வர உள்ளமில்லாமைதான் பிரச்சினையா?
நன்றி: http://www.tamilnadutalk.com/portal/lofiversion/index.php/t10863.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக