ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

இஸ்லாம் நேர் வழியா? போர் வழியா?

  • இஸ்லாத்தைப் பற்றி, இது நேரான வழியை காட்டும் என்று(2-2) அல்லாஹ் கூறுகிறார்; இதற்கும் மேலாக, “நாம் விரும்பி இருந்தால் ஒவ்வொரு மனிதருக்கும், அவன் நேரான வழியில் செல்லக் கூடிய அறிவை கொடுத்திருப்போம் என்று(32-13) வேறு விளம்புகிறார்.

    இதே அல்லாஹ்தான் யுத்தம் செய்வது உங்களுக்கு வெறுப்பாக இருந்தும் அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. (2-216)

    நிராகரிப்போரை சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்(47-1)
    அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்(2-191)

    நீங்கள் அவர்கள் பிடரியின் மேல் வெட்டுங்கள், அவர்களை கணுகணுவாக துண்டித்து விடுங்கள். (8-12)

    கலகம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்வுடையதாக உறுதிப்படும் வகையில் அவர்களை எதிர்த்து யுத்தம் புரியுங்கள்(8-49)

    இணை வைப்போரை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்; சிறை பிடியுங்கள்; முற்றுகை இடுங்கள்; பதுங்கி இருந்து பாயுங்கள்(9-5)

    விரோதிகளின் இரத்ததை பூமிக்கு ஒட்டாத வரையில் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தருமானதல்ல(8-67)

    அல்லாஹ்வின் மார்க்கத்தை குறை கூறுவோருடன் போரிடுங்கள்(9-12)

    நபியே நீர் விசுவாசிகளை யுத்தத்திற்கு தூண்டுவீராக(8-65)

    விசுவாசிகளை யுத்த களத்தில் ஒழுங்கு படுத்துவீராக(3-121)

    கனவில் கூட யுத்தம் செய்ய தூண்டுகிறார்(8-43)

    வித்தைகள் செய்து யுத்தம் செய்யத் தைரியம் தருகிறார்.(3-13)

    பத்ரி யுத்தகளத்தில் வானத்தில் இருந்து மூவாயிரம் மலக்குகளை அனுப்பி உதவி புரிகிறார்(3-124)

    எத்தனையோ நபிமார்களும் நல்லடியார்களும் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்திருக்கின்றனர்.(3-146)

    எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிகின்றார்களோ, எவர்கள் இவர்களுக்கு இடமளித்து உதவி புரிகின்றார்களோ அவர்கள்தான் உண்மையான விசுவாசிகள் (8-74)

    தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தத்தம் செய்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவோரே மகத்தான பெரும்பதவி பதவி பெற்றவர்கள், இத்தகையோர்தான் நிச்சயமாக சித்தியடைந்தோர்கள். அல்லாஹ் இவர்களுக்குள் சுவன்பதிகளை சித்தப்படுத்தி வைத்திருக்கிறான்(9-89)

    யுத்தத்தை புறக்கணிப்பவர்களை, செப்பம் வேதனை, அழுகை, இழிவு வந்தடையும், அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்(81,81-87,90,95)

    இன்னும் கேளுங்கள்.
    “உங்களை பல பிரிவுகளாக்கி உங்களுக்குள் சிலர் சிலருடன் யுத்தம் புரியும்படி செய்யவும் அவன் செக்தியுடையவனாக இருக்கிறான்(6-65)

    ஆம்! “எங்கள் பாதங்களை யுத்தத்தில் நழுவாது, நீ உறுதிப் படுத்தி வைப்பாயாக. “ (3-147 )என்று மக்கள் இறைவனைப் பார்த்து பிரார்த்திக்க வேண்டுமாம்.

    இதுதான் அல்லாஹ்வின் நேர்வழி, “ இறைவன் விரும்பி வழி நடத்தும் லட்சணம். இத்தகைய வேதங்களை வைத்துக் கொண்டுதான், நாம் உலக அமைதிக்கு தூது விடுகிறோம். நடு நிலையாளர்கள் என்று பெருமைப்பட்டு கொள்கிறோம். “ சமாதன சுகவாழ்வு பற்றி” வாய் கிழிய பேசி வருகிறோம். இடுப்பு வேட்டி நழுவிப்போவது தெரியாமல் தலையில் கிரீடம மாட்டிக் கொள்ள துடிக்கிறோம்.

குரானோ குரான் நூலிருந்து( பக்கம் 8-10)

“நாத்திக மய்யம்”
36F வாட்டர் டாங்கு சமீபம்,நாகர்கோயில்-629001

பகுத்தறிவு,ஒழுக்கம், தியாகம், பொது நன்மை, பொது நோக்கு.எல்லாமே வெங்காயங்கள்தாம்! அ மார்க்ஸ்

பெருங்கதையாதடல் எதையுமே பெரியார் உருவாக்கவில்லை என எப்படி சொல்வது, பகுத்தறிவு என்ற பெருங்கதையாடலை அவர் முன் வைக்கவில்லையா? என்ற கேள்வி எழலாம்.

" பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு. இதில் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்." (ஆனைமுத்து தொகுப்பு பக்: 129(௧௨௯))

என்று பகுத்தறிவின் புகழ் பாடியவர் அவர். பகுத்தறிவாளர் கழகங்களை அமைப்பது திராவிட கழக செயல்பாடிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், மதத்தின் ஆட்சி என்பதற்கு பதிலாக பகுத்தறிவுப் பார்வை என்ற அளவில்தான் அவரது சொல்லாடல்கள் அமைந்தன.



தமை காட்டுமிராண்டிமொழி என அவர் சொன்னதுகூட இந்த பொருளில்தான் மதத்திலிருந்து பிரிக்கபடாதது என்கிற வகையில் தமிழ், பகுத்தறிவில் தாழ்ந்த நிலையில் உள்ளது.எனவே அது காட்டுமிராண்டி மொழி அவ்வளவுதான்.



எல்லா பிரச்சனைகளுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லாக் காலங்களுங்களுக்குமான முரணற்ற தீர்வாக அவர் பகுத்தறிவு உட்பட எதையும் முன்வைக்கவில்லை. முற்றுண்மையான வரையறைகளை உருவாக்குதல், முழுமையான கோட்பாடு உருவாக்கங்களைச் செய்தல் என்பதற்கு அவர் தொடர்ச்சியாக எதிராகவே இருந்தார். அவர கட்ட விழிப்பிற்கு பகுத்தறிவும் தப்பவில்லை. பகுத்தறிவு மற்றும் மனித ஜீவிகள் குறித்த அவரது கீழ்க்கண்ட மதிப்பீடுகள் இதனை தெளிவாக்கும்.



" ஆகாரம் நித்திரை, ஆண்-பெண் சேர்க்கை ஆகீய தேவைகளில் மற்ற ஜீவன்கலிடம் உல்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன. இன்னும் பேசப்போனால் மற்ற ஜீவன்களிடையே அதிகமாகவும் காணப்படுகின்றன. அதிருப்தி என்ற கெட்ட குணம் மனிதனிடமே அதிகமாக இருக்கிறது. வேலை என்ற கெட்ட குணமும் மனிதனுக்கே அதிகமாக உண்டு. தன் இனத்தை அடிமைப்படுத்தி அதை கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணமும் மனித ஜீவனிடத்திலே அதிகமாக இருந்து வருகின்றது. தனக்கு புரியாததையும் நம்புதல், பேசுதல், நம்பச் செய்தல் முதலிய மூடதன்மை குணம் மனித ஜீவனிடத்திலே அதிகமாய் இருந்த்த் வருகிறது... இது போன்ற எத்தனையோ கெட்ட குணங்கள் மனித ஜீவன் தனது பகுத்தறிவின் பயனாகவே உடையதாகவே இருக்கிறது ஆகையால் பகுத்தறிவின் மேன்மையால் மனித ஜீவன் சிறந்தத் என்று எப்படி கூற முடியும்." (ஆனைமுத்து தொகுப்பு பக்: 1132-33 )
என்று கேட்பவர் மற்றோரிடத்தில்,
தன்பிள்ளை , குட்டி, பேத்து பிதிர் ஆகிய சந்ததிகளை பற்றிய முட்டாள்தன்மான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குதான் இருக்கிறதேயொழிய பகுத்தறிவில்லாதவைகளுக்கு இல்லை....பகுத்தறிவில்லாத எந்த உயிரும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை; தன் இனத்தை கீழ்மைபடுத்தி வாழ்வதில்லை; தன் இனத்தில் உழைப்பிலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின் மீது சவாரி செய்வதில்லை.
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தை கீழ்மைபடுத்துகிறான். வாகனமாய் பயன்படுத்துகிறான். சோம்பேறியாய் இருந்து தன் இனத்தின் உழைப்பிலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும் , பயன் அனுபவிக்க இன்னொரு கூட்டமாகவும் பிரிந்து வாழ்கிறான்.
எடுத்துக்காட்டுக்கு நாய், கழுதை,பன்றி என்கிற இழிவான மிருகக்கூட்டத்தில் பார்ப்பன சாதி, பறைசாதி, நாயுடுசாதி, முதலிசாதி என்கிற பிரிவுகள் கிடையா. ஆனால் மனித வர்க்கத்தில்தான் தன் இனத்தையே பிரித்து இழிவுப்படுத்துகிறான்

மனிதன் மீது மனிதன் சவாரி செய்கிறான், மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்கிறான், மனிதன் மனிதன் வஞ்சிக்கிறான், பகுத்தறிவின் பயன் இதுவாக இருக்கும்பொழுது மனிதன் நேர்மையானவன் என்று எப்படி சொல்ல முடியும்" ஆனைமுத்து தொகுப்பு பக்:1115)என்று வினவுகிறார்.

மனித ஏற்றத் தாழ்வுகள் பகுத்தறிவின் மூலமே நியாயப்படுத்தப்படுகின்றன. பகுத்தறிவின் ஆட்சி நடைபெறுகிற மேலை நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல, வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளையும், அதிகாரங்களைடும், சுரண்டல்களையும் நியாயப்படுத்துகிற காரியத்தை அறிவும், தர்க்கமும் சிறப்பாகவே செய்து வருகின்றன. அறிவின் வன்முறையைப் பெரியார் விளங்காதவரல்லர்.

-பெரியார்? அ.மார்க்ஸ் நூலிருந்து

வெளியீடு: பயணி வெளியீட்டகம், 6/114வது குறுக்குத்தெரு, வெள்ளாளத் தேனாம்பேட்டை, சென்னை-86. செல்:(9445124576)



செவ்வாய், 2 செப்டம்பர், 2008

போப் வருகையால் பெருகியது விபச்சாரம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற உலக இளைஞர் கள் தினத்துக்கு வருகை தந்தார் போப் பெனடிக்ட் சுமார் 1,25,000 பன்னாட்டுப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்காக சிறப்புச் சலுகைகளையும், புதிய தொகுப்புத் திட்டங்களையும், அறிவித்திருக்கிறார்கள். பன்னாட்டு மக்கள் கலந்து கொள்வதால் அவர்களுக்கேற்ப பல மொழியிலிருந்து பாலியல் பணியாளர்களை இறக்குமதி செய்திருக்கும் இவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அடையாள அட்டையும் வருவோருக்கு 10 விழுக்காடு சிறப்புக் கழிவும் அறிவித்ததாம், இதேபோல 1990-இல் உலக சர்ச்சுகளின் கவுன் சில் கூடிய போதும் நல்ல வசூல் இருந்தது; அதைப்போல பன்மடங்கு எதிர்பார்க்கிறோம் என்று பாலியல் தொழில் செய்வோரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

2000-இல் போப் அன்றைய இரண்டாம் ஜான் பால் தலைமையில் ரோமில் நடைபெற்ற இதேபோன்ற நிகழ்ச்சி முடிந்தபிறகு அவ்விடத்தைத் தூய்மை செய்த பணியாளர்கள் ஆயிரக்கணக்கான பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளைக் கண்டெடுத்தார்களாம் பரமண் டலத்தில் இருக்கும் பரமபிதாவே உம்முடைய இரட்சகத்தினால் ஆஸ்திரேலிய மண்ணில் எம் தொழில் பெருகுவதாக... நின் கிருபையினால் இவ்வாண்டு எங்களுடைய வருமானம் உயருவதாக... ஆமென்... என்று அவர்களும் இயேசுவின் புனித ஆசியைக் கோரி நிற்கிறார் கள் போலும். ஏனெனில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாதிரிகள் உட்பட பலருக்கு ஆடி மாத சிறப்புக் கழிவு அறிவித்து வணிகம் நடத்துவதைப் போல ஒட்டுமொத்தமாக பாவ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறதல்லவா அண்மையில்... அந்த வரிசையில் ஆங்காங்கே (ஏ.டி.எம்.) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் போல, தானியங்கி பாவ மன்னிப்பு வழங்கும் இயந்திரச் சேவையும் அறிமுகப்படுத்தப்படலாம். அச்சூழலில் இந்த பாவங்களையெல்லாம் கார்டைச் செருகி கணநேரத்தில் காணாமல் செய்துவிடலாம். ஆ....மென்...!

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., சாஸ்திரி, வித்வான் முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களல்ல! - பெரியார்

குடிஅரசு 1927, போளூர் ஆரம்பாசிரியர் மகாநாடு

அக்கிராசனப் பிரசங்கம்சகோதரிகளே! சகோதரர்களே!இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம், வரவேற்புப்பத்திரம் முதலியவைகளைக் கண்டு எனது மனம் மிகவும் வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்த விதத்தில் தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மகாநாட்டுக்கு அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியுடையவனாவேன். உங்களின் அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய தைரியமில்லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை ஏற்க வேண்டியவனாயிருக்கிறேன்.

என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷகாலந்தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருஷமாகிய எனது 8 வயதுக்கு மேல்பட்டு 11 வயதுக்குள்பட்ட காலத்தில் நான் பாடம் படித்த காலத்தை விட உபாத்தியாயரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமாயிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள் இவன் படிப்புக்கு லாயக்கில்லை என்பதாகக் கருதித் தாங்கள் செய்து வந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11வது வயதிலேயே ஈடுபடுத்தி விட்டார்கள். இந்த 2 வருஷ கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே கல்வி முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் நான் உங்களுக்கு எந்த விஷயத்தையும் சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்ல வருகிறேன்.தற்கால ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதிப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தாலும் அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதிற்கில்லாத நிலையில் இருந்துகொண்டு அத்தொழிலை தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாயிருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப்பேசுவதும், தீர்மானப்பதும் தங்களுக்கு சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும் தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளவோ, தேசம் முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியையடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு ஆதாரமாகக் கருதிக் கற்கவும் கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாயிருக்கிறதென்பது நீங்கள் அறிந்த விஷயம் தான். ஆரம்பக்கல்வி முதல் உயர்தரக்கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால் தற்காலம் அடிமைத் தன்மையையும் சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவி செய்து வயிறு வளர்க்கும் தேசத்துரோகிகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகத் தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?சாதாரணமாக ஆரம்பாசிரியர்கள் என்கிற பெயரையோ யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத் தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்பாசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே ஆவார்கள்.

அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களிலும் இவைதான் காணப்படுகிறது. எனவே,இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்களிருவரும் எப்படிப் பிள்ளைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்திற்கும் தேச நன்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும் மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அப்பேர்ப்பட்ட ஆரம்பாசிரியர் களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளைபெறும் இயந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும். ஆகவே, அந்த முதலாவது ஆரம்பாசிரியர்களின் யோக்கியதை இப்படியாய் விட்டது.

அடுத்தாற்போலுள்ள இரண்டாவது ஆரம்பாசிரியர்களாகிய உங்கள் யோக்கியதையோ, உங்கள் வயிற்றுப்பாட்டுக்கே கான்பரன்° கூட்டவேண்டியதாகப் போய்விட்டது. உங்கள் இருவர்களாலும் கற்பிக்கப்படப்போகிற பிள்ளைகள் எப்படித்தக்க யோக்கியதை அடைய முடியும். கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமல்ல. அது அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எடுத்துக் கொண்டால மக்கள் சுயமரியாதையோடும் சுதந்திரத்தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும், அன்பு, பரோபகாரம் முதலியவைகளோடு கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாகத் தகுந்ததாக இருக்க வேண்டும்.

இவைகளை அறிந்தே வள்ளுவரும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும், கல்லாதார் அறிவில்லாதார் என்றும்”, “தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்என்றும், “ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்என்றும் சொல்லி இருக்கிறார். இதற்கேற்ற கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள். நாய்க்கு நாலுகால், பூனைக்கு வாலுண்டு கண்ணில்லாதவன் குருடன், திருடாதே, அடிக்காதே என்று சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டுவிடக்கூடும். இவைகள் எல்லாம் குழந்தைகள் தானாகவே படித்துக் கொள்ளும். ஒருவனை அடித்தால் அவன் திரும்பி அடித்துவிடுவான். ஒருவனை வைதால் அவன் திரும்பி வைதுவிடுவான். திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள் என்பதும் நாயும் பூனையும் கண்ணில் படும்போதே கால எவ்வளவென்பதும் வாலுண்டென்பதும் தெரிந்து கொள்வான். இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமும், பணச்செலவும் மெனக்கேடும் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்ராயம்.

நீங்கள் முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்று கொடுக்க வேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல. உங்களைவிடப் பெரிய சகலகலாவல்லபர்களிடத்தில் ஏம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்களை பெற்ற பையன்களும், ஒரு காபிக்கடைக்குப் போனால் தனது சுயமரியாதையற்று அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு சாமி ஒரு கப் காப்பி கொண்டு வா என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான். தன் தேசத்தையும் மக்களையும் காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டி போடுகிறான்.

இந்த பட்டம் எல்லாம் கல்வியாகுமா? இதை பெற்றவர்கள் எல்லாம் படித்தவர்களாவார்களா? வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்கிறார்களோ அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திரப் பாடம் தெரியாதோ அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படி பூகோளம் தெரியாதோ அப்படியே எம்.ஏ. படித்தவனுக்கு பிறருக்கு க்ஷவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும், வேத வியாக்கினங்களும் தெரியாதோ அப்படியே வித்வான்களுக்கும், சா°திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது. ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., சா°திரி, வித்வான் முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர். அறிவாளிகளுமல்லர், உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில் தானே தவிர அறிவாகாது.

இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்ககளாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படியாதவர்கள் பரோபகாரியாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம.

எனவே இதுகளல்ல கல்வியென்பது நமக்கு விளங்கவில்லையா? நமது நாட்டின் கேட்டிற்கும், நிலைமைக்கும் முதல் காரணம் தற்காலக் கல்விமுறையென்பதே எனது அபிப்ராயம். முற்காலத்தில் பனை ஓலையில் எழுதித் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படித்த படிப்பை விட தற்காலப் படிப்பு மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட்டது? ஓலைச் சுவடியும், எழுத்தாணியும், ஆற்று மணலும் போய்க் காகிதக் குப்பைகளுக்கும் பெரும் பெரும் புத்தகங்களுக்கும், இங்கிப் பெட்டி, பேனா, பென்சில்களுக்குமாக நமது பணங்கள் சீமைக்குப் போக ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறு பலனுண்டா? படிப்பில்லாத என்கிற முற்காலத்து மக்களை விட படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதத்தில் உயர்ந்திருக்கிறார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன்யத்தில் நம்பிக்கையில், படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருக்கிறார்கள்?

முன் காலத்தில் ஒருவன் வாங்கின கடனைக் கொடுக்காவிட்டால் அவன் வீட்டுவாயிலில் ஒரு பசுவையும் அதன் கன்றையும் தீனி போடாமல் கட்டிவிடுவது வழக்கம். இந்தப் பட்டினியின் பாவத்திற்கஞ்சி பெண் ஜாதியின் தாலியை விற்றாவது கடனைக் கொடுத்துவிட்டுத் தான் வீதிப்புரம் நடப்பான் என்று என் தகப்பனார் சொல்லியிருக்கிறார். கல்வி ஏற்பட்ட காலமாகிய இப்பொழுது அம்மாதிரி செய்தால் படித்தவர்கள் என்கிற வக்கீல்கள் பாலைக் கறந்து நமக்குக் கொண்டுவந்து கொடுத்துவிடு பாவம் வந்து உன்னை என்ன செய்து விடும் பார்க்கலாம் என்று சொல்லி ஏமாற்றி வழிகாட்டி வருவார்கள். இதனாலேயே தற்காலம் எத்தனை மேஜி°ட்ரேட் கச்சேரி, எத்தனை முன்சீப் கோர்ட்டு, எத்தனை செஷன் ஹைகோர்ட், எத்தனை போலீ° கச்சேரி ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில்லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா?

படிப்பு என்னும் தற்காலக் கல்வி முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்க ஹீனமாக நடக்கத் தூண்டி அல்லல் படுத்தி நாட்டையும், சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது.