செவ்வாய், 27 அக்டோபர், 2009

மும்பையில் கொளத்தூர் மணி உரை








குழந்தை வரம் - இடைமீது பலன்

வரம் வேண்டி வேண்டுதல்

செய்தாள், பக்தை! காணிக்கை

செலுத்த இடைத்தரகரிடம்

சென்றவுடனே, இடைமீது பலன்

கிடைத்தது. கடவுளின் ஆசியால்

குழந்தை பிறந்தது.

திங்கள், 26 அக்டோபர், 2009

தமிழின எதிரிகளே!! நாங்கள் உங்களை வெல்வோம்

தமிழின அழிப்பை நடத்திய சிங்கள இனவெறி நாய்களே!!!

சக தமிழனை மனிதனாக கூட மதிக்க தெரியாத சாதி வெறி பிடித்த தமிழ் பேசும் இரண்டு கால் விலங்குகளே உங்களை நாங்கள் வெல்வோம்

நீ எனது ஊன்று கோலைப் பிடிங்கி கொண்டாய்

நான் நிற்கப் பழகிக் கொண்டேன்

நீ, என் வெளிச்சத்தை அணைத்தாய்

நான் நெருப்பை வளர்த்தேன்

நீ என் முன் குழிகளை வெட்டினாய்

நான் தாண்ட பழகிக் கொண்டேன்

நீ, என் குடிசையை கொளுத்தினாய்

நான் வெயில் மழையில் இருக்க பழகினேன்

நீ என் உறவுகளை அழித்தாய்

நான், என் பாசத்தை அழித்தேன்

நீ,என் மனிதத்தை அழித்தாய்

நான் என்னுள் மிருகத்தை வளர்த்தேன்

அதனால், என் பிரிய எதிரியே

உன்னை வெல்லுவது

எனக்கு எளிதாயிற்று

விடுதலை வேட்கை வெற்றி வேந்தன்

நாம் தமிழர்கள்............?

ஒரே மொழிதான்

ஆனாலும்-

நீயும் நானும் பேசிக் கொள்வதில்லை.

ஒரே ஊர்தான்

ஆனால்-

நீயும் நானும் உறவாடிக் கொள்வதில்லை

ஒரே பண்டிகைதான்

ஆனால்-

நீயும் நானும் பண்டம் பகிர்ந்து கொள்வதில்லை

ஒரே மதம்தான்

ஆனால்-

நீயும் நானும் மன்னித்துக் கொள்வதில்லை...

நம் இடையினில் இருப்பது

சாதி தோழா.

நன்றி:விடுதலை வேட்கை- வெற்றி வேந்தன்