தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.
சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.
இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.
சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.
எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ச.தமிழ்மாறன் செய்தி தொடர்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம்.
நகரத்திலே வாழ்ந்து தமிழை, பண்பாட்டை, நன்றியுணர்ச்சியை மறந்த குடியாகிப்போன நாம், பணம் கொடுத்தால் உணவு கிடைக்கும் என்றநம்பிக்கையில்தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால், உண்மை அதுவல்லவே உறவுகளே, உழவனின் உழைப்பும், இயற்கையின் கொடைதான் நம் உணவுக்கு, இருப்புக்கு அடிப்படை. இதை நினைவூட்ட உழவர்களின் வியர்வையை மதிக்கும் பொருட்டு, இயற்கையின் கொடையாகிய நிலம், நீர், காற்று, பகலவன் என அனைத்திற்கும் நம் வாழ்விடங்களிலிருந்தே நம்முடைய நன்றியை தெரிவிக்கும் ஒரு நன்றி பெருவிழாகவே இந்த விழாவை
“விழித்தெழு இளைஞர் இயக்கம்”
ஏற்பாடு செய்துள்ளது.எங்களின் உண்மையான முயற்சிகளுக்கு எப்போதும் இப்பொழுதும் நீடிக்கும் உங்களின் உள்ளார்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களது இந்த ஆதரவை வாய்ப்பாக பயன்படுத்தி சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
நாம்தானா தமிழர்கள்? நம்மிடைய தமிழ் மீதமிருக்கிறதா?
தோழர்களே எம் முயற்சி நமக்கான பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியல்ல, நமக்கான பண்பாட்டை உருவாக்கும் முயற்சி.......நாம் இழந்தவைகளை நற்பண்புகளை மீட்கும் முயற்சி........
என்ன அப்படி இழந்துவிட்டோம்?எங்கு தவறவிட்டோம்
நம்மிடையே பயன்பாட்டில் உள்ள வழக்குகளை கொஞ்சம் பாருங்கள்...........
என்ற வள்ளுவன் வாக்குக்கு எதிராக சாதிகள் என்னும் வீண் சுமையை சுமந்து திரிகிறோம். சக தமிழனை சாதியின் பெயரால் ஒடுக்குகிறோம். நல்லதொரு பண்பாட்டை பின்பற்றாதிருந்தால்தான் நாம் தமிழர்களா?
இப்படி எதிலும் தமிழை பின்பற்றாத நாம்.........தமிழ் தவிர வேற்று மொழி தெளிவாக பேசத்தெரியாத காரணத்தினாலே, வழக்கில் தமிழ் தேவைப்படுவதால் தமிழை பயன்படுத்துகிறோம்.....இல்லையேல் விட்டுவோம் என்ற நிலையிருந்தால்.............இது நன்றி கொன்ற செயலாகிவிடாதா?
தமிழல்லாது தமிழர்களுக்கு ஏது சிறப்பு.......தமிழை நாம் பாதுகாக்காவிட்டால் யார் பாதுகாப்பது...தமிழார்வம் என்றாலே வேலைவெட்டி இல்லாதவர்களின் வேலை என்றல்லவா பார்க்கிறோம். கொஞ்சம் சிந்தியுங்கள், அக்கறை கொள்ளுங்கள். நமக்காக நாம் உழைக்காமல் யார் உழைப்பது?
எனக்கா தமிழ்பற்று கிடையாது புலிகளை எவ்வளவு ஆதரிக்கிறேன் தெரியுமா? பிரபாகரன் என்தலைவர் என்றெல்லாம் எகிறும் தோழர்கள்..எத்தனை பேர் புலிகள் செய்ததை செய்யத்தயார்?
புலிகள் தனித்தமிழ் பெயர்களைத்தான் இயக்கத்தோழர்களுக்கு இட்டார்கள்.
அலுவலகங்கள், வழக்கு மொழி என அனைத்திலும் வடமொழி கலப்பில்லாத தமிழையே கையாண்டார்கள்.
புலிகள் சாதியை ஒழிக்க முயற்சித்தார்கள், நீங்கள் தயாரா?
புலிகள் தமது இயக்கத்தில் ஆணும், பெண்ணும் சரிநிகர் என்று நிறுவினார்கள். நீங்கள் தயாரா?
சாதி கடந்து, மதம் கடந்து வாருங்கள் தோழர்களே..தமிழ் காப்போம் , நம் அடையாளம் மீட்போம்....தயவுகூர்ந்து சாதி, மதம் மறந்து வராதீர்கள்...மீண்டும் என்றாவது உங்கள் நினைவுக்கு வரலாம்.