வழிமுறை1:
கடவுளிடம் நாம் மனதுருகி அவரிடம் கீழ்கண்டவாறு கர்த்தரை நோக்கி வேண்டுயோமாயின் என்ன நடக்கும்
மதிப்பிற்குரிய/அன்பிற்குரிய எல்லாம்வல்ல உலக உருவாக்கதிற்கு காரணமான கடவுளே, இவ்வுலகிலுள்ள கொடிய நோய்களில் ஒன்றாகிய புற்று நோயை இன்றே தீர்த்திடுமாறு, முழு நம்பிக்கையோடு வேண்டிகொள்கிறோம் தாங்களும் மத்தேயு 21:21, மாற்கு 11:24. யோவான் 14:12-14, மத்தேயு 18:19, ஜேம்ஸ் 5:15-16 இல் கூறியபடி எங்கள் நம்பிக்கைக்கு இறங்குவீர் என்று இயேசுவில் பெயராலே வேண்டுகிறோம். ஆமேன்.
இதுபோன்று நாம் உண்மையிலேயே கடவுளிடம் நம்பிக்கையோடு, தன்னலம் கருதாமல், வேண்டினால், அவ்வேண்டுதலுக்கு கடவுள் இரங்கினாரேயானால் உலகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான புற்று நோயாளிகள் பலனடைவார்களே!
ஆனால், இப்படி உளமுறுகி, உண்மை உள்ளத்தோடு வேண்டினாலும் ஏதாவது நடக்குமா? ம்ஹும் ஒன்றும் நடக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த கட்டுரையின் படி அமெரிக்காவில் 54 விழுக்காட்டினர் பைபிளை முழுமையாக உண்மையென்று நம்புகின்றனராம், இன்னும் அந்நாட்டின் சில பகுதிகளில் பைபிளின் மேல் நம்பிக்கை கொண்டவர்களின் விழுக்காடு 75 ஐ தாண்டுகிறதாம்.
பைபிள் உண்மையையாயிருந்தால் கண்டிப்பாக நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டுமில்லையா?
பைபிளின்படி, தொடர்ந்து கேட்டால் கடவுள் கொடுப்பாராம், தொடர்ந்து தேடினால் கண்டிப்பாக கிடைக்குமாம், தொடர்ந்து தட்டினால் எந்த கதவும் திறக்குமாம். (மத்தேயு 7:7)
யார் கேட்டாலும் கிடைக்குமென்றால்
1) இந்து மத நம்பிக்கையுள்ளவன் கேட்டால் கிடைக்குமா?
2) இஸ்லாமிய மத நம்பிக்கையுள்ளவன் கேட்டால் கிடைக்குமா? அல்லது
3) கிருஸ்து மீது நம்பிக்கை கொண்டால்தான் கிடைக்குமா? என்ற கேள்வி எழாமலில்லை.
யார் கேட்டு நடக்கின்றதோ இல்லையோ ஒரு சுயநலமில்லாமல் இருக்கும் ஒருவனுடைய வேண்டுகோள் ஏற்க பட வேண்டுமாயில்லையா? அப்படியிருக்கையில் உலகிலுள்ள புற்று நோயாளிகளை குணபடுத்தி தாரும் என கடவுளை வேண்டுவதும் ஏற்கப்பட்டு தீர்க்க படவேண்டுமாயில்லையா? ஆனால் அப்படி எதுவும் நடந்து விடாது.
மத்தேயு 17:20 இல் இயேசு கூறுகிறார்,
“ கடுகளவேனும் நம்பிக்கையிருந்தால் இம்மலையை “ இங்கிருந்து அங்கே நகர்ந்து செல்” என்று கூறினால் இம்மலையும் நகரும். "
மத்தேயு 21:21 இல் இயேசு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்,
“நான் உங்களுக்கு உண்மையாக சொல்லுகிறேன், நீங்களும் விசுவாசத்துடன் சந்தேகிக்காமலும் இருந்தால், நான் இம்மரத்திற்கு செய்த்து போலவே உங்களாலும் செய்ய இயலும். மேலும் அதிகமாக சாதிக்க இயலும். இம்மலையை போய் ‘கடலில் விழு’ என்று நீங்கள் விசுவாசத்துடன் கூறினால் அது நடக்கும். நீங்கள் நம்பிக்கையோடு வேண்டுவது எதுவும் கிடைக்கும். “
மாற்கு 11:24 இல் இவ்வாறு கூறுகிறார்
“ உங்கள் வேண்டுதலின் போது கடவுளிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள், அவை கிடைக்கப்பெற்றன் என நம்புங்கள், அவை கண்டிப்பாக உங்களுக்கு உரியதாகும். “
கடவுளே சொல்லிவிட்டார், “ வேண்டுதலை அடைந்துவிட்ட்டோம் என நம்பினால், அது கண்டிப்பாக உங்களுடையது” இது உண்மையானால் புற்று நோய் எல்லோருக்கும் தீர வேண்டும் இல்லை கடவுள் பொய் சொல்லியிருக்க வேண்டும்.
பொய் சொல்லியவர் கடவுளாக இருக்க முடியுமா...........................?
தொடரும்.
1 கருத்து:
தங்களின் வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன். மிகச்சிறப்பாக உள்ளது. தொட்ர்ந்து எழுதுங்கள்.
http://thamizhoviya.blogspot.com வலைப்பதிவை பார்த்து விட்டு கருத்து தெரிவியுங்கள்.
நன்றி.
கருத்துரையிடுக